துாய்மை பணியில் தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம்: பாப்பகாப்பட்டியில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு சாலையோர இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்-பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராம பகுதியின் சாலையோர இடங்களில், அதிகமான செடிகள் வளர்ந்து காணப்-பட்டன.இதையடுத்து, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, சாலையோர பகுதிகளில் வளர்ந்த செடி மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் சாலை துாய்மையானது.