உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் விழா
குளித்தலை, குளித்தலை அடுத்த, புழுதேரி பஞ்., சீத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் சாந்திவனம் மனநலக் காப்பகத்தில் உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் விழா நடந்தது.கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். சாந்திவனம் மனநலக் காப்பக இயக்குனர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் செழியன், சாந்திவனம் பயனாளிகளுக்கு பரிசு வழங்கி, பாராட்டினார்.கரூர் மாவட்ட மனநல திட்ட மாவட்ட மனநல மருத்துவர் பாரதிகார்த்திகா, மனச்சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சாந்திவனம் மனநல சமூகப்பணியாளர் மரிய ஜெர்ஸ்சில்லா, மனநல சமூக பணியாளர் யுவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.