சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்
கரூர், சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா தொழிலில் ஈடுபடுவோருக்கான தமிழக அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த பயண விமான பங்களிப்பாளர்கள், சிறந்த தங்கும் விடுதி, உணவகம், சிறந்த சாகச சுற்றுலா நிகழ்த்தியவர்கள், சுற்றுலா தொடர்பான கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர்கள், சுற்றுலாவில் சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர்கள், சிறந்த சுற்றுலா வழிகாட்டி உள்பட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட உள்ளது.சுற்றுலா தொழில் முனைவோர்கள் இந்த விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.comஎன்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். வரும், 15க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலரை, 04324-256257, 9789630118 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.