மேலும் செய்திகள்
அத்திப்பாளையத்தில் பட்டா வழங்கும் விழா
23-Dec-2025
வயலுாரில் மோசமான சாலை வாகன ஓட்டிகள் பாதிப்பு
23-Dec-2025
அம்மாபேட்டை அருகே விபத்தில் இருவர் பலி
23-Dec-2025
மனைவி மாயம்; கணவர் புகார்
23-Dec-2025
கரூர் : கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் தபால் ஓட்டுக்களை இன்று போடலாம் என, கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக உதவி மையத்தில், தபால் ஓட்டளிக்க தவறியவர்கள் இன்று காலை, 7:00 மணி முதல் பதிவு செய்ய கொள்ளலாம். இங்கு கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர்கள் பதிவு செய்யலாம். விராலிமலை தொகுதிக்குட்பட்ட பணம்பட்டியில் உள்ள ஸ்ரீகுமரன் பாலிடெக்னிகிலும், மணப்பாறை சட்டசபை தொகுதிக்கு மணப்பாறையில் உள்ள லட்சுமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், வேடசந்துார் தொகுதிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. இந்த வசதிகளை, போலீசார் மற்றும் ஓட்டுச்சாவடி பணியாளர்கள் பயன்படுத்தி ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025