மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவன்மாயம்; தந்தை புகார்
04-Apr-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் பூஞ்சோலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 54; விவசாய தொழிலாளி. இவரது மகள் ராஜராஜேஸ்வரி, 18; இவர், கடந்த, 25ல் கடைக்குச் சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால், மீண்டும் வீட்டுக்கு திரும்ப வரவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரித்து வருகின்றனர். * குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம், 55; கூலித்தொழிலாளி. இவரது மகள் கோமதி, 20; இவர், தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார்.கடந்த, 25 காலை, கல்லுாரிக்கு தேர்வு எழுத சென்றார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.
04-Apr-2025