சரக்கு ரயில் முன் பாய்ந்து இளம் பெண் விபரீத முடிவு
குளித்தலை, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், தேவதானம் அருகே திருச்சி, கரூர் மார்க்கம் ரயில் இருப்பு பாதை உள்ளது. நெடுஞ்சாலையில், ரயில்வே கேட் அருகில் நேற்று மதியம் 1:30 மணியளவில், ஈரோட்டில் இருந்து திருச்சி சென்ற சரக்கு ரயில் முன், அடையாளம் தெரியாத, 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.கரூர் ரயில்வே போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.