டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
டாஸ்மாக் விற்பனையாளரிடம்பணம் பறித்த வாலிபர் கைதுகரூர், அக். 29-கரூரில், டாஸ்மாக் மதுபான கடை விற்பனையாளரிடம், கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், மணவாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன், 50; கரூர் மக்கள் பாதையில் உள்ள, டாஸ்மாக் மதுபான கடையில், விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 26 மாலை சிறுநீர் கழிக்க டாஸ்மாக் மதுபான கடை அருகே சென்றுள்ளார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த, சஞ்சய் குமார், 22; என்பவர், கண்ணப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்து, கண்ணப்பன் அளித்த புகார்படி, டவுன் போலீசார் சஞ்சய் குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.