மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
31-Mar-2025
கரூர்:கரூர் அருகே, கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பி.வெள்ளாப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த, முருகேசன் என்பவரது மகன் தினேஷ் குமார், 23, என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
31-Mar-2025