மேலும் செய்திகள்
மொபட்டில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
27-Apr-2025
கரூர்:கரூர் அருகே, புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை கடத்தி வைத்திருந்ததாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால கிருத்திகா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் சுக்காலியூர் சோதனைச்சாவடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் சென்ற, கரூர் பழைய சுக்காலியூர் பகுதியை சேர்ந்த சதீஷ் கண்ணன், 38, என்பவரை பிடித்து விசாரித்தனர்.அப்போது, சதீஷ் கண்ணன் வீட்டில் உள்ள சான்ட்ரோ காரில், புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், 233 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதிப்பு, 51 ஆயிரத்து, 900 ரூபாய். இதையடுத்து, சதீஷ் கண்ணனை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து, மதுபாட்டில்கள், டூவீலர் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
27-Apr-2025