மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்
மனைவி, மகள்கள் மாயம்வாலிபர் போலீசில் புகார்கரூர், டிசகரூர் மாவட்டம், தொழிற்பேட்டை சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 32; இவருக்கு விஜயா, 31, என்ற மனைவியும், பிரித்தி ஜிந்தா, 14, வேதா ஸ்ரீ, 4, என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக விஜயா, பெண் குழந்தைகளுடன் கடந்த, 28ல் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் விஜயா, பெண் குழந்தைகளுடன் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் அன்பழகன், போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.