உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு இன்று போலீஸ் காவல் நிறைவு

யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு இன்று போலீஸ் காவல் நிறைவு

கரூர்: யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு, இன்றுடன் போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது.கரூரை சேர்ந்த பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணனிடம், பண மோசடி செய்ததாக, கைது செய்யப்பட்ட விக்னேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கரூர் டவுன் போலீசார் யூ டியூபர் சவுக்கு சங்கரை கடந்த, 8ல் கைது செய்து, மறுநாள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நான்கு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததால், கரூர் டவுன் போலீசார் அழைத்து சென்றனர்.வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், யூ டியூபர் சவுக்கு சங்கரிடம் கரூர் டவுன் போலீசார் விசாரித்தனர். அப்-போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் உள்ள தொடர்பு, விக்னேஷிடம் பணம் பெற்றது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்துள்ளனர்.இன்றுடன், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, நான்கு நாள் போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது. இதனால் அவரை இன்று, கரூர் நீதிமன்றத்தில் டவுன் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். அவரின் போலீஸ் காவல் நீட்-டிக்கப்படுமா அல்லது நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, சென்னை புழல் சிறைக்கு யூ டியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் அழைத்து செல்லப்படுவாரா என்பது இன்று தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை