உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திருப்பரங்குன்றம் மலை பெயரை மாற்ற முயற்சிகிருஷ்ணகிரியில் வீடுகள் முன் பதாகைகள் வைப்பு

திருப்பரங்குன்றம் மலை பெயரை மாற்ற முயற்சிகிருஷ்ணகிரியில் வீடுகள் முன் பதாகைகள் வைப்பு

திருப்பரங்குன்றம் மலை பெயரை மாற்ற முயற்சிகிருஷ்ணகிரியில் வீடுகள் முன் பதாகைகள் வைப்புகிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சேலம் ரோடு, பழையபேட்டை, பழைய சப்-ஜெயில் ரோடு உள்ளிட்ட பகுதி ஹிந்துக்கள் தங்கள் வீடுகள், கடைகள் முன் நேற்று ஒரு பதாகையை ஒட்டினர். அதில், 'திருப்பரங்குன்றம் முருகன் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி, ஹிந்துக்களே அணி திரள்வோம். பிப்.,4ல், மாலை, 3:00 மணிக்கு ஹிந்துக்கள் சங்கமம் எல்லோரும் வாங்க,' என்று இருந்தது. இது குறித்து, ஹிந்து முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கலைகோபி கூறியதாவது:தமிழகத்தில் வரலாற்று சின்னங்களையும், புராதன இடங்களையும் பெயர் மாற்றம் என்ற பெயரில் அதிகாரிகள் அழிக்க பார்க்கின்றனர். இங்கு கூட, தொல்லியல் துறை ஆவணங்கள் படி கிருஷ்ணகிரி மலை என்ற பெயரில் உள்ள மலையை, சையது பாஷா மலை என வருவாய்த்துறை ஆவணங்களில் அதிகாரிகள் மாற்றி வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து தான் ஹிந்து அமைப்புகள் ஒன்றிணைந்து வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் வரும் பிப்., 4ல், நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள, பல்வேறு ஹிந்து அமைப்பினர் வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனர். இவ்வாறு கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை