குடிமகன்களின் கூடாரமாகும் புதிய பஸ் ஸ்டாண்ட்திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதாக மக்கள் புகார்
குடிமகன்களின் கூடாரமாகும் புதிய பஸ் ஸ்டாண்ட்திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதாக மக்கள் புகார்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு நாள்தோறும், 700க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லை. இலவச கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. பயணிகளுக்காக போடப்பட்ட ஆர்.ஓ., இயந்திரம் செயல்படுவதில்லை. பெரும்பாலான கடைகள் ஆக்கிரமிப்பு செய்து, பயணிகள் சென்று வரும் பகுதியில், பொருட்களை வைத்துள்ளனர். மேலும், மாலை நேரம் முதலே, குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிபோதையில் பஸ் ஸ்டாண்டின் பல இடங்களில், அரைகுறை ஆடையுடன் கவிழ்ந்து கிடப்பவர்களை கடந்து செல்ல வேண்டியுள்ளதாக, பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், குடிபோதையில் கிடப்பவர்களின் மொபைல், பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் கும்பலும், பஸ் ஸ்டாண்டில் வலம் வருகின்றனர். தற்போது, பயணிகள் வைத்திருக்கும் பொருட்களையும் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மக்கள் தங்கள் டூவீலர்களை ஸ்டாண்டுகளில் விடாமல், கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் நடுவே நிறுத்திச் செல்கின்றனர். இதை நோட்டமிடும் நபர்கள் டூவீலர்களையும் திருடி செல்வது அதிகரித்துள்ளது. பஸ் ஸ்டாண்டின் முகப்பு மற்றும் பின்புறமுள்ள விளக்குகள் சரிவர எரிவதில்லை. பாதுகாப்பு பணியிலும் ஒன்றிரண்டு போலீசார் மட்டுமே இருப்பதால், சர்வசாதாரணமாக திருட்டு சம்பவங்கள் நடக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து, உள்ளே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி, குடிபோதையில் பஸ் ஸ்டாண்டிற்குள் படுப்போரை விரட்டியடித்தாலே, திருட்டு சம்பவங்கள் குறையும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.