மேலும் செய்திகள்
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்
22-Dec-2024
உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறைகுற்ற புலனாய்வில் மாநில முதலிடம்கிருஷ்ணகிரி: சேலம் டி.எஸ்.பி., வடிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, பறக்கும்படை தனி தாசில்தார் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து செயல்பட்டதால் கடந்த, 2024ல், ரேஷன் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட, 245 வாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டன. இது மாநில அளவில் முதலிடம் ஆகும். அதேபோல, 176 டன் ரேஷன் அரிசி பறிமுதலுடன், 115 வாகனங்களையும், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது மாநில அளவில் மூன்றாமிடம் ஆகும்.சிறப்பாக பணிபுரிந்த கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புத்துறையினருக்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வு காவல்துறை இயக்குனர் சீமா, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பாராட்டு சான்றிதழ் பெற்ற உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வாழ்த்து தெரிவித்தார்.
22-Dec-2024