மேலும் செய்திகள்
கொல்லிமலையில் பிரத்யங்கிரா ஹோமம்
16-Dec-2024
பிரத்தியங்கரா தேவி கோயில் ஆருத்ரா தரிசன பூஜைஓசூர், :கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள ராகு, கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், மார்கழி மாத பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள, ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தன. இதே போல மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை, யாகம் நடந்தது. இதில், மிளகாய் வத்தல்கள் மற்றும் திரவியங்களை கொண்டு, சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டனர்.
16-Dec-2024