மேலும் செய்திகள்
கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி
04-Feb-2025
போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் கடும் பனிப்பொழிவு; மக்கள் அவதிபோச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், போச்சம்பள்ளி, களர்பதி, புலியூர், அகரம், நாகரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 5:00 முதல் 8:00 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமப்புற சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். கடந்த, 15 நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு, பகலில் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி, பாதிக்கப்பட்டுள்ளனர். மத்துார், போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
04-Feb-2025