உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரி மீது பைக் மோதல் சுகாதார பணியாளர் பலி

லாரி மீது பைக் மோதல் சுகாதார பணியாளர் பலி

லாரி மீது பைக் மோதல் சுகாதார பணியாளர் பலிகிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி., பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 42. இவர் அரசு பொது சுகாதார பிரிவில் மருத்துவ களப்பணியாளராக இருந்து வந்தார். கடந்த, 9 இரவு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 10:00 மணியளவில் புளியஞ்சேரி அருகில் கொத்த கிருஷ்ணப்பள்ளி - குருபரப்பள்ளி சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் நின்ற லாரியில் மோதியதில், படுகாயமடைந்த சுப்பிரமணி பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ