உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், மத்திய மாவட்ட, பா.ம.க., சார்பில், உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமை வகித்தார். மகளிரணி மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட தலைவர் மாதேஸ்வரி, இளம்பெண்கள் அணி தலைவி கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர், பெண்கள் தினம் குறித்து பேசினர். தொடர்ந்து, மகளிர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு, சுதந்திரமாக பணிபுரிதல், பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகரத்தில் வெளியூரில் இருந்து வரும் பெண்களுக்கு பொது கழிப்பிட வசதி இல்லை. இதுகுறித்து நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பெண்களின் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் பொதுகழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பையும், உரிமையையும் வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு குறித்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி