காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர்சுப்பிரமணியன் மகள் திருமண வரவேற்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காங்., கட்சியின் முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன்- - சாந்தி தம்பதியரின் மகள் டாக்டர் சோனியா மற்றும் டாக்டர் சரவணநாதன் ஆகியோருக்கு கடந்த, 9ல் புதுக்கோட்டை குமரன்மலையில் திருமணம் நடந்தது.இதையடுத்து, காவேரிப்பட்டணம் ஹவுசிங்போர்டு எதிரிலுள்ள கே.ஆர்.வி., மஹாலில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, எம்.பி., விஷ்ணுபிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமு வசந்தன், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். மேலும், தர்மபுரி, காங்., மாவட்ட தலைவர் தீர்த்திகிரி, கிருஷ்ணகிரி, காங்., மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகராட்சி தலைவர் தியாகராஜன், காங்., மாவட்ட துணைத்தலைவர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், மாவட்ட பொருளாளர் ஜெகதேவி உமர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜா குமாரவேல், நாராயணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, வேப்பனஹள்ளி தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.