உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டு

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டு

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டுகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ராஜாராம் நகரை சேர்ந்தவர், முருகன், அரசுப்பள்ளி ஆசிரியர். இவர் கடந்த, இரு நாட்களுக்கு முன், தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிலிருந்த, ஒன்றரை சவரன் கம்மல், 10,000 ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. அவர் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை