உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி காம்பவுண்ட் சுவரை உடைத்த ஒப்பந்ததாரர்மாணவ, மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறி

பள்ளி காம்பவுண்ட் சுவரை உடைத்த ஒப்பந்ததாரர்மாணவ, மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறி

பள்ளி காம்பவுண்ட் சுவரை உடைத்த ஒப்பந்ததாரர்மாணவ, மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறிஓசூர்:ஓசூர் காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1 முதல், 8ம் வகுப்பு வரை, 1,230 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, 8 கூடுதல் வகுப்பறைகள் கட்ட, கட்டுமான பொருட்களை கொண்டு வர, பள்ளியின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதியை ஒப்பந்ததாரர் இடித்து அகற்றினார். பணிகள் முடிந்தும், ஒப்பந்த தாரர் காம்பவுண்ட் சுவரை கட்டி கொடுக்கவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் புகார் செய்தும், மாநகராட்சி நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் கண்டுகொள்ளவில்லை.அதனால், சமூக விரோதிகள் பள்ளிக்குள் எளிதாக வந்து செல்கின்றனர். மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பள்ளிக்குள் புகுந்து, மின் இணைப்புகள் மற்றும் மேடையின் கூரை போன்றவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்செயலால், பெற்றோர் கடும் அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக உள்ளதால், பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கு கின்றனர். எனவே, காம்பவுண்ட் சுவரை கட்டி, இரும்பு கேட் பொருத்த, மாநகராட்சி முன்வர வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழு கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ