உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வக்ப் திருத்த சட்டத்தை மத்திய அரசுதிரும்ப பெற கண்டன பொதுக்கூட்டம்

வக்ப் திருத்த சட்டத்தை மத்திய அரசுதிரும்ப பெற கண்டன பொதுக்கூட்டம்

வக்ப் திருத்த சட்டத்தை மத்திய அரசுதிரும்ப பெற கண்டன பொதுக்கூட்டம்கிருஷ்ணகிரி:மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் உலமாக்கள் சார்பில், கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி இமாம் சவுக் மஜீத் கலீல் அகமத் சாகிப் தலைமை வகித்தார். பல ஜமாத்துகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் இறையன்பன் குத்துாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் அப்துல் பாசித், த.மு.மு.க., மாவட்ட தலைவர் நுார்முகமது, உள்பட, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ