உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரைவரை மிரட்டி மொபைல் பறித்து சென்ற 2 பேர் கைது

டிரைவரை மிரட்டி மொபைல் பறித்து சென்ற 2 பேர் கைது

டிரைவரை மிரட்டி மொபைல்பறித்து சென்ற 2 பேர் கைதுஓசூர், அக். 4-ஓசூர், டோபிகார்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 22, டிரைவர். இவர், கடந்த 1, இரவு, 10:00 மணியளவில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் பின்புற சாலையில் நடந்து சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த சிலர், ஸ்ரீதரை மிரட்டி அவரிடமிருந்து மொபைல் போனை பறித்து தப்பினர். இது குறித்து ஸ்ரீதர், ஓசூர் ஹட்கோ போலீசில் புகாரளித்தார். விசாரணையில், மொபைல் பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஓசூர், நல்லுார் ரோடு, ராஜேஷ்குமார், 40, திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த சந்தோஷ், 21, ஓசூர், கே.சி.சி., நகர் பிரவீண்குமார், 19, என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மொபைல் போனை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி