உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலிஅரூர்: அரூர் அடுத்த பறையப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 38. இவர், அரூரில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு கடையை பூட்டி விட்டு, ஹீரோ பைக்கில் வீட்டிற்கு சென்றார். அரூர் - ஊத்தங்கரை சாலையில், சோரியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கம், பைக் மோதியதில் விஜயகுமார் படுகாயமடைந்து பலியானார்.அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தீர்த்தகிரி, 64. இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், அரூர் - திருவண்ணாமலை சாலையில், சங்கிலிவாடி காமராஜர் நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்த தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவங்கள் குறித்து, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !