மேலும் செய்திகள்
தனியார் ஊழியரிடம் ரூ.12.98 லட்சம் மோசடி
16-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சாந்தி நகரை சேர்ந்தவர் கண்-ணப்பன், 58; தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண், 'வாட்ஸாப்' குரூப்பில் இணைக்கப்பட்டது. அதில் ஷேர் மார்க்கெட் தொடர்பான விபரங்களை பதிவிட்டு வந்தனர். முத-லீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்-ளனர்.அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை, கண்ணப்பன் தொடர்பு கொண்டார். அவர்கள் தெரிவித்த 'லிங்க்'கில், தன் விப-ரங்களை பதிவு செய்தார். சிறியளவில் முதலீடு செய்தார். லாபத்-துடன் முதலீட்டு தொகை திரும்ப கிடைத்தது. இதனால், 21.60 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குக-ளுக்கு அனுப்பினார். அதன் பின் எந்த தகவலும் வரவில்லை. சந்-தேகமடைந்து 'வாட்ஸாப்'பில் இணைத்த எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மோசடிக்கு ஆளானதை உணர்ந்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Aug-2024