உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு

கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டு

கோவிலில் காணிக்கை, அரிசி மூட்டைகள் திருட்டுபோச்சம்பள்ளி, : போச்சம்பள்ளியில், பழனி ஆண்டவர் நகரில் ஜோதி லிங்கேஸ்வர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று, கோவிலில் இருந்த, 2 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த, காணிக்‍கையை எடுத்துக்கொண்டு, அன்னதானம் வழங்க கோவிலில் வைத்திருந்த, 4 மூட்டை அரிசியை திருடிச் சென்றுள்ளனர். இது அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளதால், அதை வைத்து, போச்சம்பள்ளி போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை