அரசு மருத்துவமனை உள்ளேதெருநாய் தொல்லை அதிகரிப்பு
அரசு மருத்துவமனை உள்ளேதெருநாய் தொல்லை அதிகரிப்புஊத்தங்கரை, :கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பால், நோயாளிகள் மிகவும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும், 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் ஊசி போடும் பகுதியில், நாய் ஒன்று மேஜையின் மீது படுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், நோயாளிகளின் பெட்டுக்கு அடியில் வைக்கப்படும் ரொட்டி துண்டுகள், சாப்பாடு ஆகியவற்றை இழுத்து சென்று விடுகின்றன. இது, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நோயாளிகள், மருத்துவர்கள் என அனைவரும் தெருநாய்களின் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள், அரசு மருத்துவமனையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைத்து வருகிறது. அரசு மருத்துவமனை உள்ளே தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க, பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.