உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் முதன்முறையாகமுதியவருக்கு செயற்கை கால் பொருத்தி சிகிச்சை

கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் முதன்முறையாகமுதியவருக்கு செயற்கை கால் பொருத்தி சிகிச்சை

கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் முதன்முறையாகமுதியவருக்கு செயற்கை கால் பொருத்தி சிகிச்சைகிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு எலும்பு முறிவு மற்றும் முட நீக்கவியல் சார்பில் செயற்கை கை, கால் பொருத்தும் திட்ட துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பூவதி தலைமை வகித்தார். அப்‍போது, எலும்பு முறிவு மற்றும் முட நீக்கவியல் பொறுப்பு பேராசிரியர் தனசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி, 77. இவருக்கு கடந்த, 6 மாதங்களுக்கு முன் காலில் அடிபட்டு சீழ் பிடித்தது. அவருக்கு முழங்காலுக்கு கீழ், காலை அகற்றி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொடர் சிகிச்சை அளித்த பின், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில், செயற்கை கால் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லுாரி துவங்கி, 4 ஆண்டுகளில் முதல்முறையாக, செயற்கை கால் பொருத்தும் சிகிச்சை நடந்தது. அதன்படி முதியவர் சின்னதம்பிக்கு செயற்கை கால் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல மாவட்டத்தில் பலருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோன்று சிகிச்சையை, தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால், 3 லட்சம் ரூபாய் செலவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவர்கள் செல்வராஜ், தினேஷ், எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் செந்தில், ரமேஷ், முத்துசாமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மருத்துவ காப்பீடு மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் ராஜேஷ், நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை