நிலத்தகராறில் ராணுவ வீரரை தாக்கிய இருவருக்கு காப்பு
நிலத்தகராறில் ராணுவ வீரரை தாக்கிய இருவருக்கு 'காப்பு'போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அடுத்த, குள்ளனுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 32. இவர், சென்னையில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது, ஒரு மாத விடுமுறையில் வீட்டிற்கு வந்த இவர், தன் தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த மணிகண்டனின் தம்பி செந்தில்குமார், 28, தன் நண்பர்கள், 5 பேருடன் கடந்த, 16ல் மணிகண்டனை தாக்கினார். அதை தடுக்க முயற்சித்த மணிகண்டனின் மைத்துனர் திருநாவுக்கரசு, தலையில் காயமடைந்ததை அடுத்து மணிகண்டன், திருநாவுக்கரசு இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று, குள்ளனுார், எல்லைக்கொட்டாயை சேர்ந்த துாயமணி, 30, அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன், 25, ஆகிய இருவரையும் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்து, தலைமறைவான, 4 பேரை தேடி வருகின்றனர்.