உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அறிவு, வேலை வாய்ப்புக்காகபல மொழி கற்பதில் தவறில்லை

அறிவு, வேலை வாய்ப்புக்காகபல மொழி கற்பதில் தவறில்லை

'அறிவு, வேலை வாய்ப்புக்காகபல மொழி கற்பதில் தவறில்லை'கிருஷ்ணகிரி''அறிவை, வேலைவாய்ப்பை மொழி கொடுக்கிறது. எனவே பல மொழி கற்பதில் எந்த தவறும் இல்லை,'' என, தே.மு.தி.க., விஜயபிரபாகரன் கூறினார்.கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி காமராஜ் நகரில், தே.மு.தி.க., நிர்வாகி இல்ல நிகழ்ச்சியை ஒட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. பொருட்களை வழங்கி தே.மு.தி.க., விஜய பிரபாகரன், பேசியதாவது: ஒவ்வொரு வீட்டிலும் தந்தையின் கனவை நிறைவேற்ற பிள்ளைகள் இருப்பார்கள். அதே போல்தான் என் தந்தையின் கனவை நான் நிறைவேற்றுவேன்.இன்று அரசியல் செய்பவர்கள், 2 மொழி வேண்டுமா, 3 மொழி வேண்டுமா என்று கேட்கின்றனர். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம் என்றார் விஜயகாந்த். அறிவை, வேலைவாய்ப்பை மொழி கொடுக்கிறது. அதனால் பல மொழி கற்பதில் எந்த தவறும் இல்லை. தமிழை மட்டும் கற்க நாங்கள் தயார். ஆனால், அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். வேலை தேடி வெளிநாடு, வெளி மாநிலம் செல்லும்போது, அங்கு பேச வேறு மொழி வேண்டும்.எனவே, அனைத்து மொழிகளையும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். வரும், 2026 சட்டசபை தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை