உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தகவல் அறியும் உரிமை சட்டம்விழிப்புணர்வு முகாம்

தகவல் அறியும் உரிமை சட்டம்விழிப்புணர்வு முகாம்

தகவல் அறியும் உரிமை சட்டம்விழிப்புணர்வு முகாம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. தகவல் ஆணைய கமிஷனர் செல்வராஜ் தலைமை வகித்தார். முகாமில், அனைத்து துறைகளின் சார்பில் கலந்து கொண்ட பொதுத்தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய சில சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கோரப்படும் தகவல்களுக்கு விரைந்து பதில் அளிக்க, பொதுத்தகவல் அலுவலர்களுக்கு, கமிஷனர் அறிவுறுத்தினார். முன்னதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்குகளின் விசாரணை நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் அனைத்து துறை பொதுத்தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை