உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை நாளந்தா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை நாளந்தா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை நாளந்தா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகிருஷ்ணகிரி:புதுடில்லி ரச்சனா சாகர் நிறுவனம், தேசிய அளவில் சி.பி.எஸ்.இ., பள்ளி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,'சி.பி.எஸ்.இ., பரீக்ஷா 2025' என்ற, ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து மாதிரி தேர்வுகளை நடத்தியது. இத்தேர்வில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இத்தேர்வில், கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ., பள்ளி, 10ம் வகுப்பு மாணவி இலாவணி, அறிவியல் பாடத்திலும், தம்மன்ன சவுத்ரி ஹிந்தி பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்று தென்மண்டல அளவில் முதலிடம் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், தர்ஷிகா கணக்கியல் பாடத்திலும், அருண் பிரசாத் உயிரியல் பாடத்திலும், ருத்ராட்சன் இயற்பியல் பாடத்திலும், நவதீப் கிருஷ்ணா கணித பாடத்திலும், தென்மண்டல அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு, ரச்சனா சாகர் நிறுவனம் சான்றிதழ்களும், பரிசு தொகையாக, 2,100 ரூபாயும் வழங்கி சிறப்பித்தது. சாதனை புரிந்த மாணவ, மாணவியரை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதம், மருத்துவர் புவியரசன் மற்றும் கல்வி நிர்வாக இயக்குனர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை