உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., நிர்வாகி வீட்டில் புகுந்தமர்ம நபர்கள்; போலீசில் புகார்

பா.ஜ., நிர்வாகி வீட்டில் புகுந்தமர்ம நபர்கள்; போலீசில் புகார்

பா.ஜ., நிர்வாகி வீட்டில் புகுந்தமர்ம நபர்கள்; போலீசில் புகார் ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையில் வசிப்பவர் நாகராஜ். பா.ஜ., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர். கடந்த, 21 அதிகாலை, 2:45 மணிக்கு அவரது வீட்டின் இரும்பு கேட்டை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இருவர், தரைதளத்திலுள்ள கதவை தட்டியுள்ளனர். மேலும், முதல் தளத்திற்கு சென்று, நாகராஜ் துாங்கி கொண்டிருந்த அறை கதவை தட்டி, தாக்குதல் நடத்த தயாராக இருந்துள்ளனர். இக்காட்சிகள் நாகராஜ் வீட்டிலுள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக, ஓசூர் டவுன் போலீசில் நாகராஜ் புகார் செய்தார். இந்த வழக்கில், 'சிசிடிவி' காட்சியின் அடிப்படையில் ஒருவரை அழைத்து வந்து விசாரித்து விட்டு போலீசார் விடுவித்தனர். குற்ற வாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.இந்நிலையில், ஓசூர் ஏ.எஸ்.பி., அலுவலகத்திற்கு, முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் சென்ற, பா.ஜ., கட்சியினர், போலீசார் உடனடியாக உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட காரணமாக இருப்பவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரேயிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை