உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகிருஷ்ணகிரி:பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், சுவாமிக்கு அபி ேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.காவேரிப்பட்டணம் ஒன்றியம், எர்ரஅள்ளி கருக்கன்சாவடி கிராமத்தில், சிவசுப்பிரமணியர் கோவிலில், பக்தர்கள் மொட்டை அடித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பர்கூர் ஒன்றியம் காட்டாகரம் பஞ்., அண்ணா நகரில் உள்ள வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வேலம்பட்டி அருகே உள்ள பாலேகுளி பெரியமலையில் இருந்து, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்து, சுப்பிரமணியருக்கு பாலாபி ேஷகம் செய்தனர். பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கல்யாண முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வேப்பனஹள்ளி அருகே, கடவரப்பள்ளி காரகுப்பம் பச்சைமலை முருகன் கோவிலில், முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முருகன் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்தார்.பர்கூர் - ஜெகதேவி சாலையிலுள்ள பாலமுருகன் கோவில், சந்துார் மாங்கனி முருகன் கோவில், போச்சம்பள்ளி அடுத்த அகரம் சுப்பிரமணியர் சுவாமி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. * ஓசூர், பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வேல்முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.அதேபோல், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் உள்ள தன்வந்திரி கோவிலில், நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, அதியமான் கல்லுாரி மேலாளர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.* தேன்கனிக்கோட்டை அருகே கூச்சுவாடி கிராமத்தில் உள்ள, வடபழனி பாலதண்டாயுதபாணி கோவிலில், 58ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வள்ளி, தெய்வானை சமேத பாலதண்டாயுதபாணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை