வடமாநில இளைஞர்களைதாக்கிய வாலிபர் கைது
வடமாநில இளைஞர்களைதாக்கிய வாலிபர் கைதுகிருஷ்ணகிரி, : ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புகானாவை சேர்ந்தவர் கவுதம், 31. இவர் கே.ஆர்.பி.அணை அருகில் பச்சிகானப்பள்ளியில் தங்கி, தனியார் கோழி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார்.அதில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ஷெரீபுல், 21, ஜாகீர், 23, தாகில்புல், 23 உட்பட பலர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, அவர்களுக்கும் பச்சிகானப்பள்ளியை சேர்ந்த வினோத், 25 என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபம் குறையாத வினோத் தன் நண்பர்களுடன்கோழி நிறுவனத்திற்கு சென்று கவுதம் உட்பட, வடமாநில வாலிபர்கள், 7 பேரை தாக்கினார். கவுதம் புகார் படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. டேம் போலீசார் வினோத்தை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.