உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாடித்தோட்டம் அமைக்கஅரசு பள்ளியில் கருத்தரங்கு

மாடித்தோட்டம் அமைக்கஅரசு பள்ளியில் கருத்தரங்கு

மாடித்தோட்டம் அமைக்கஅரசு பள்ளியில் கருத்தரங்கு கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பம் பஞ்.,க்கு உட்பட்ட நாட்டாண்மைக்கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மாடித்தோட்டம் அமைப்பது குறித்த கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சாந்தி வரவேற்றார். உளவியல் தொழில்நுட்ப வல்லுனர் உதயன் மற்றும் நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல் காதர், இயற்கை விவசாயி கோவிந்தசாமி ஆகியோர், மாணவர்களுக்கு மாடி தோட்டத்தின் பயன்கள், செடிகள் வைக்கும் முறை மற்றும் இயற்கை விவசாயத்தின் நன்மைகள், இயற்கை உரங்கள் பயன்படுத்துவதனால் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும் உள்ளிட்டவை குறித்து பேசினர். தொடர்ந்து பள்ளி கட்டடத்தின் மேல்தளத்தில், 100 செடிகள் கொண்ட மாடித்தோட்டம் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை