உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரையில் சமூக விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரையில் சமூக விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை,:ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், சமூக விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய பேரணியை ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விவசாயம், போதை பொருட்களை தவிர்த்தல், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகை களை, மாணவர்கள் கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர்.தொடர்ந்து பள்ளியில், புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர். வித்யா விகாஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை