சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி :தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராதா தலைமை வகித்தார். துணைத்தலைவர் லட்சுமி, இணை செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யும் அரசாணை, 95ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பொருளாளர் கனகவள்ளி, செயலாளர் கல்யாண சுந்தரம், முன்னாள் மாநில தணிக்கையாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.