உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போட்டோ, வீடியோ கிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

போட்டோ, வீடியோ கிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி:இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, 30 நாட்கள் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோ கிராபி பயிற்சி வழங்கப்படுகிறது.இது குறித்து, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, 30 நாட்கள் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும், 21க்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், மேலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி