இருப்பு குறைவாக வைத்திருந்தரேஷன் கடைக்காரர் சஸ்பெண்ட்
இருப்பு குறைவாக வைத்திருந்தரேஷன் கடைக்காரர் 'சஸ்பெண்ட்'ஓசூர்:ஓசூரில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், கெலவரப்பள்ளி அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். பொதுமக்கள் சார்பில் ஒகேனக்கல் குடிநீர் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்கு, ஒகேனக்கல் குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார். பெத்த கொள்ளு, புனுகன்தொட்டி, அலசநத்தம் ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். சென்னசந்திரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் ஆய்வு செய்த அவர், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்கள் இருப்பு விபரங்களை சரிபார்த்த போது, இருப்பு குறைவாக இருந்தது. அதனால் கடை விற்பனையாளர் அரவிந்த் என்பவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில், கள ஆய்வு மேற்கொண்ட அனைத்துத்துறை அலுவர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் பேசிய கலெக்டர், பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு பணியையும் விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட சப்கலெக்டர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.