பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி,: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப்பட்டி கிராமத்தில் கடந்த, 13 முதல்,16 வரை பொங்கல் விழா நடந்தது. விழாவில் கபடி போட்டி, கயிறு இழுத்தல், தவளை ஓட்டம், கோணிப்பை ஓட்டம், மூன்று கால் ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், வேகமாக நடத்தல், கேரம், செஸ், முறுக்கு கடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.பெரியவர், சிறியவர், குழந்தைகள், பெண்கள் பங்கேற்றனர். இவ்விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பரிசளிப்பு விழா, தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது.ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகிரி, தினகரன், யசோதா ஜெயராமன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேசிங்கு வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு ஏ. பள்ளிப்பட்டி எஸ். ஐ., கெய்க்வாட் பரிசு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கிய நிர்வாகிகள் ராஜேஷ் சேகர், குமார் ராவணன், ஊராட்சி செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜிவ் காந்தி நன்றி கூறினார்.