மேலும் செய்திகள்
கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்
07-Jan-2025
மண் கடத்திய லாரி பறிமுதல்கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளம் மற்றும் புவியியல் துணை இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் அவதானப்பட்டி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், மூன்று யூனிட் மண் திருட முயன்றது தெரிந்தது. புகார் படி, கே.ஆர்.பி., டேம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.* ஓசூர் அருகே, எடப்பள்ளியிலுள்ள ஏரி சாலை அருகே, திருட்டுத்தனமாக டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக, மத்திகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார், மண் அள்ளிய, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் உரிமையாளர்கள், டிரைவர்களை தேடி வருகின்றனர்.
07-Jan-2025