உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

ஓசூர்:ஓசூர், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் நர்மதாதேவி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் கருணாநிதி, பொருளாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அதிக மதிப்பெண் பெற்றவர்கள், விடுமுறை எடுக்காமல் வந்த மாணவ, மாணவியர் மற்றும் பள்ளிக்கு சமூக பொறுப்புணர்வு நிதி வழங்கி வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தினர், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தஞ்சை பெரிய கோவில் போன்ற மாதிரியை உருவாக்கி, கோவில் மகிமை குறித்து, 8ம் வகுப்பு மாணவி அகிலா பேசியது, அனைவரையும் கவர்ந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக இணை பொருளாளர் கணேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் முரளிபாபு உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை