மேலும் செய்திகள்
இருவர் மாயம்
24-Feb-2025
மாணவி உட்பட இருவர் மாயம்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ரகமத் நகரை சேர்ந்தவர் அம்ரூல் நாதப் மகள் அஸ்மத் காதுான், 19. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 22 மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், தன் மகள் பணியாற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தோலாஜி, 27, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.உத்தனப்பள்ளி அருகே, தேன்துர்க்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவப்பா மகள் சுப்ரியா, 20. ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 24 இரவு, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரில், தேன்துர்க்கத்தை சேர்ந்த நவீன்குமார், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.
24-Feb-2025