உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மலைக்கோவில்நுழைவாயில் கும்பாபிஷேகம்

ஓசூர் மலைக்கோவில்நுழைவாயில் கும்பாபிஷேகம்

ஓசூர் மலைக்கோவில்நுழைவாயில் கும்பாபிஷேகம்ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் அருகே, தேர்ப்பேட்டை சாலையில், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் நுழைவுவாயில் கட்டும் பணி, பொதுமக்கள் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.முன்னதாக சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. தேர்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பெண்கள் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ், அ.தி.மு.க., பகுதி செயலாளர் ராஜி, பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை