உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கடூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் மனைவி கனகா, 27. கணவருடன் அனுசோனை கிராமத்தில் தங்கி, பென்னங்கூரில் உள்ள தனியார் கார்மென்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த, 8 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.கெலமங்கலத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. கூலித்தொழிலாளி. கடந்த, 9 மதியம், 3:40 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. அவரது தாய் கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலம் மேல் தெருவை சேர்ந்த சுனில்குமார், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து, கெலமங்கலம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை