தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பரிசு
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பரிசுகிருஷ்ணகிரி:தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் வனத்துறை சார்பில் கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி, வாக்கத்தான், ஜஸ்ட் எ மினிட், உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் வழங்கினார்.