உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெட்டி கடைக்காரருடன் ‍மோதல்: தொழிலாளி சாவு

பெட்டி கடைக்காரருடன் ‍மோதல்: தொழிலாளி சாவு

பெட்டி கடைக்காரருடன் ‍மோதல்: தொழிலாளி சாவுஓசூர்:ஓசூர் அடுத்த தின்னுாரை சேர்ந்தவர் அருண்குமார், 27; கூலித்தொழிலாளி. இவர், தன் நண்பர் பால்ராஜ் என்பவருடன் கடந்த, 16ல் பேரிகை அடுத்த ராமச்சந்திரம் டாஸ்மாக்கில் மது வாங்கினார். அருகில், பெட்டிக்கடை வைத்திருந்த மாதேஷ் என்பவரிடம் ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் வாங்கியவர் பணம் தரவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கடைக்காரர் மாதேஷ், தன் கூட்டாளிகளான காளி, மாதேவனுடன் சேர்ந்து தாக்கியதில், உள்காயம் அடைந்த அருண்குமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெளிக்காயங்கள் இல்லாவிட்டாலும், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் அறிவுறுத்தினர். இருப்பினும், சிகிச்சை பெறாமல் அருண்குமார் வீடு திரும்பினார். இந்நிலையில் உடல்நலம் பாதித்த அருண்குமார், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து அவர் மனைவி பவானி புகார் படி, பேரிகை போலீசார் அருண்குமார் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி