கி.கிரி அரசு அலுவலகங்களில்சமத்துவ நாள் உறுதிமொழி
கி.கிரி அரசு அலுவலகங்களில்சமத்துவ நாள் உறுதிமொழிகிருஷ்ணகிரி:ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.,14, சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை நாள் என்பதால் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு ஊழியர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர். இதில், அலுவலக மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடந்த, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்து வாசிக்க, உடற்கூறியல் துறை பேராசிரியர் சங்கமேஸ்வரன், இணை பேராசிரியர் சுபதா, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் ராஜா, தினேஷ் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.