உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கலைத்திருவிழா போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

கலைத்திருவிழா போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறுவள அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. பள்ளி தலைமை ஆசிரியர் நளினி, போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நாட்டுப்புற பாடல், வில்லுப்பாட்டு, மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், ஓவியம், மணற்சிற்பம், களிமண் பொம்மை தயாரித்தல், வீதி நாடகம், தெருக்கூத்து, பறை, நாதஸ்வரம், கீபோர்டு வாசித்தல், பொம்மலாட்டம் உள்ளிட்ட, 34 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், 400 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி